துரோகம் எழுதி கொண்டது..
நாவில் நடனம் ஆடும் சிறு பொய்
காற்றில் கபடம் கலப்படம் ஆகிவிடில்..
உண்மையும் உணர்ச்சியும் உரசிக்கொள்ள உத்வேகம் பொங்கும் உள்ளபெருக்கை சற்றே உள்நெஞ்சில் உறிஞ்சி கொண்டு..
நெருஞ்சி முள் பட்ட தும்பை பூ போலே என் இதயம் ஆழ கிழித்து விட..
இருக்கம் பால் ஊற்றி ஆற்றி விடும் புண் போல் இல்லை இது..
மிகவும் அதிதமாக பழகிய காரணத்தால் வார்த்தைகளை லாவகமாக பயன்படுத்த பாதுகாக்கும் போது..
பூனை அருந்திய பால் போல சிந்தி விட தான் செய்கிறது சில வார்த்தைகள் .
வார்த்தைகளை திரும்ப பெறுவதற்கு
நான் மகானும் அல்ல..
நீ மன்னனும் அல்ல..
என்றே சொல்கிறது ஆழ்மனம் ,
குரோதமும் துரோகமும் சிறு குப்பியில் நிரப்பப்பட்ட பாஸ்பரஸ் அமிலம் அல்ல,
இங்கேயே தொடங்கி இங்கேயே முடிவதற்கு..
பெரும் பெட்டியில் நிரப்பப்பட்ட அக்சீசன் போல் இங்கே நிரப்பட்டு தண்ணீரில் சென்று ஒன்றும் இல்லாமல் போகும்,
செந்நீர் கூட சிந்தாமல் சத்தமில்லாமல் நீ எனக்கு செய்த துரோகம் போலவே சத்தமில்லாமல் உயிருள்ள மீன்களோடு கழிப்பாய் ஓரிரவை உயிரில்லாத உன் வெறும் உடம்போடு..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home