முதல் புகை வண்டி பயணம்..
பயணங்கள் பலருக்கு பலவாறு பல அனுபவங்களை கொடுத்திருக்கும், ஆனால் ஒவ்வரு பயணமும் புது அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. முதல் பயணம் பொதுவாக நமக்கு நினைவில்லாத வயதில் தொடங்கியிருப்பதால் அதில் பெரிய நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதே பயணம் மீண்டும் நமக்கு கிடைக்கப்பெருமாயின் உண்மையாகவே கொடுத்து வைத்தவர்களுக்கு தான் அமையும். முதல் நீண்ட பயணம் எனக்கு நினைவு தெரிந்து கொல்லம் - சென்னை புகை வண்டி பயணம்(இப்போது அது செங்கோட்டை - சென்னை பொதிகை ஸூபர் பாஸ்ட்எக்ஸ்ப்ரெஸ் தமிழ் சொற்களை விட ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாக தான் இருக்கிறது).
இன்னமும் நினைவிரிக்கிறது முதல் முறை தென்காசி புகை வண்டி நிலையம் சென்று, அப்பா எப்போ வரும், எப்படி வரும், எங்க இருந்து வருது, நாம எங்க போறோம், இப்படியாய் நான் கேட்ட அனைத்திற்கும், பொறுமையாய் பதில் சொல்லி கொண்டிருப்பார் அப்பா. உள்ளே சென்று தேநீர் பருகியதும் (ப்லாஸ்டிக் அரக்கன் மெல்ல நுழைந்த காலம் அது), இது எதற்கு, அது அதற்கு என்று கேள்விகள் கேட்டு தூங்கி போன நான் விழித்து பார்க்கையில் இருந்தது அந்த பொழுதின் கனவு தேசமாக நான் எண்ணிய சென்னையில்.. சென்னையில் மாமா வீட்டில் இருந்து, மஞ்சள் அம்போசிடர் காரில், பயணம் செய்ததாகவும், ராயப்பேட்டை மணி கூண்டை பார்த்ததும், ஜெமினி மேம்பாலம் அருகில் எனக்கு வெள்ளை கான்வாஸ் ஷூ வேண்டும் என்று அழுதததும், தான் நினைவில் இருக்கிறது.
பயணம் தொடரும்...
Labels: CHENNAI, ENGLISH, EXPERIENCE, MADRAS, PLASTIC, TENKASI, TRAIN, TRAVEL

3 Comments:
There is a certain novelty to travel writing in Tamil. The language lends itself to a 'poetic' travelogue. Hope to see more!
Super dude
முதல் புகை வண்டி பயணம் ! நல்லா இருக்கு அருண் கார்த்திக்.தொடர்ந்து எழுது.
நினைவுகளை சுமந்து கொண்டு நம் வாழ்கை பயணம். சில நிறுத்தங்களை இங்கு பதிவு செய் :)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home