சுழற்சி தொட்டி - recycle bin
இதற்கு தமிழ் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசிக்க நினைத்த பொழுதே எழுத தொடங்கி விட்டேன் நித்தமும் நாம் பார்த்து பழகிய ஒரு பொருள். இந்தியர்கள் பொதுவாக குறைவாக உபயோகிக்கும் பொருள் என்பதால் சற்றே கடினமாக தான் இருக்கிறது தமிழ் பெயர் என்னவெண்டு. சுழற்சி தொட்டி, குப்பை தொட்டி, முதலாவதே கொஞ்சம் கேட்கும் படியாக உள்ளது, அதனால் அதுவே தமிழ் சொல்லாக இருக்கும். முதல் முறை கணினி இயக்கிய போது நான் பார்த்து அசந்து போனேன் இதில் எங்கிருந்து கழிவுகள் வருமென்று. ஆனாலும் அதில் உள்ள சில பல கழிக்கப்பட்ட வேண்டாத ஆவனங்களை கொட்டும் சத்தம் பிடித்தே பல முறை செய்து பார்த்ததுண்டு. அதே சுழற்சி தொட்டி இன்று ஏனோ ரசிக்கும் அளவு மனம் இல்லை, அதற்கு இரண்டு காரணம். ஒன்று சுழற்சி தொட்டியை காட்டும் கணினியே அங்கிருக்க வேண்டிய பொருள், இரண்டு நாமும் சில நேரம் நம்மை சேர்ந்தவர்களால் அவர்களுக்கு தேவை / தேவை இல்லாத ஒரு இலக்குக்காக நம்மை இலகுவாக உபயோக படுத்துவதாக ஒரு உணர்ச்சி. ஆனால் என்றாவது ஒரு நாள் அந்த சுழற்சி தொட்டிக்கு சுழற்சி வருமென்ற ஒரு உணர்ச்சி வெள்ளத்தில், மூழ்காமல், மிதக்காமல், தன்னிடம் வரும் கழிசடைகளை பொறுமையாக கையாலும் அதற்கு பெயர் காய்யாலாகத தானம் என்றால் கழிசடை கு என்ன பெயர் --

