கல்வி - பிச்சை புகினும் கற்கை நன்றே
நீண்ட நாட்களாய் எழுத வேண்டும் என்று நினைத்த பதிவு, மனதின் உண்மையை அப்படியே பதிவிட முடியாது, அங்கங்கு சீர்திருத்த வாதிகள் இல்லாத காரணத்தாலும் அரசியல் நிறைந்த சுழல் இருப்பதாலும் என் எழுத்துக்களை சீர்திருத்த முயற்சித்திருக்கிறேன்.
கல்வி - அப்படியே பின் நோக்கி 50 வருடம் போங்க, வெள்ளைக்கார தொரை நாமளா என்னத்தையோ வச்சு விட்டுட்டு போய்ட்டான் . சரி அப்போ எத்தன பள்ளிக்கூடம் இருந்துச்சு எல்லாருமே இந்திய பிரஜைனு வாயால சொன்ன போதுமா, எல்லாருக்கும் சமமான கல்வி கிடைத்ததா? சரி கிடைக்கலை னு தெரிஞ்சாச்சு தனியார் கல்வி மயம் வேணுமானு யோசிச்சு அரசு அதை கையில் எடுத்துருக்கணும், எடுக்கல. எடுக்கல னு பட்டுன்னு சொல்லிட முடியாது மதிய உணவு , கல்வி என்று ஒரு பக்கம் இருந்தாலும் அது எந்த அளவுக்கு தனியார் கல்வியோடு (கான்வென்ட்) ஒத்து போச்சு ன்னு பாக்கணும். கேந்திரிய வித்யாலயா னு அரசு அதிகாரிகளின் குழந்தைக்கு கிடைத்த கல்வி ஏன் எங்கோ ஓர் கொட்டாம்பட்டி குழந்தைக்கு கிடைக்கவில்லை. நாம் அங்கேயே இருவருக்குமான ஓர் கண்ணுக்கு தெரியாத கோடு போட்டு விட்டோம். அடுத்ததடுத்து இவர்களுக்கு கிடைப்பவை எல்லாம் இவர்களுக்கு கிடைக்காமலே போகும். இங்கே நான் கூற விளைவது அவர்களுக்கு கல்வி கிடைத்ததே என்று இல்லை இவர்களுக்கும் அது கிடைக்குமாறு செய்திருக்கலாமே என்று தான். 3% கல்விக்கான செஸ் எங்க போகுது என்று கேட்க நேரமில்லாத தைரியம் இல்லாத கல்வி முறை தான் தனியார் பள்ளிகளில் கற்பிக்க படுகிறது என்று எடுத்து கொண்டாலும் அது இவுங்களுக்கும் கொடுத்துவிட்டு போங்க. இதெல்லாம் கேக்குறதுக்கு அவ்ளோ அறிவ கொடுத்த தான பிரச்சனை அதையே தடுத்திருவோம்னு நினைச்சிடாங்க போல. தமிழன் என்று சொல்லி தலை நிமிர முயற்சி செய்வோம்.


