பெங்களூர் - சேலம் - திருச்சி
பயணம் தொடர்கிறது..
வருடம் : தமிழ் விக்ருதி ஆங்கிலம் 2010
மாதம் : புரட்டாசி முடியும் தருணம்
காலம் : புரட்டாசி - ஐப்பசி குளிரும், மழை நினைத்தால் பெய்யும் காலம்
பயணம் : பெங்களூர் - சேலம் - திருச்சி
எதிர்பார்த்திருந்த பயணம் தான் என்றாலும், இப்போதெல்லாம் (அப்போதெல்லாம்) பயணம் செய்வதற்கு முன்னேர்பாடுகள் செய்யவில்லை பணி நிமித்தம் என்று ஞாபகம், முன்னேற்பாடுகள் செய்யாமைக்கு. ஒரு வழியாக தங்கைக்கு நிச்சயம் என்று சொல்லி கிளம்பி விட்டேன். உண்மையை சொல்வதற்கும் தயங்கும் சிலரில் நானனும் ஒருவனாகி விட்டதால்.. அது போகட்டும் சோக கதை, நாம் கதைக்கு வருவோம்..
வேகமாய் கிளம்பி, சாந்தி நகர் பேருந்து நிலயம் அடைந்த போது மணி இரவு 9 : 30.. கடைசி பேருந்தில் இடம் இல்லை, இது வார கடைசியும் ஆதலால்.. இருந்தே ஆக வேண்டுமே, சொல்லி விட்டோம் நாளை அங்கு இருப்பேன் என்று, என்னை போலவே இன்னும் இருவர், ஆனால் அவர் போக வேண்டியது சேலம் வரைக்குமே. என்னை போலவே என்றால், அவர் சேலம் அருகாமையில் இருப்பவர் போல் தெரிந்தது, இருவர் கையிலும் ஒரு சிறிய துணி மூட்டை. அநேகமாக ஏதோ சிறு வியாபார நிமித்தமாக வந்ததாக தெரிந்தது. இருவரும் மாமன் மச்சான் உறவு, என்பது அவர்கள் தெலுங்கில் பாவா என்று பேசி கொண்டதில் புரிந்து கொண்டேன். அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் சேலம் செல்ல வேறு பேருந்து உள்ளது என்று கேட்பதற்குள், ஒருவர் அவர் பேருந்தில் இடம் இருப்பதாகவும், சீட்டு வாங்க தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாகவும் சொல்லி வந்தார், சரி வேறு வழியுமில்லை என்று பின் தொடர்ந்தோம் மூவரும். ஒரு இருக்கைக்கு நாம் கொடுக்க வேண்டிய பணம் 600 நான் யோசித்து முடிப்பதற்குள், இதை வைத்து நாங்கள் மூன்று முறை சேலம் போய் விடுவோம் என்று என்னையும் வாங்க விட வில்லை புண்ணிய அத்ஹ்மா.
சரி இன்றாய இரவு நமக்கு தூக்கம் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். சேலம் மட்டுமே செல்ல பேருந்து இல்லை இங்கிருந்து, ஆகவே ஒரு ஆடோ வில் ஸெடிலைட் பேருந்து நிலயத்தை அடைந்தோம்.. நல்ல இருக்கைகள் எதுவென்று ஒருவாறு முடிவுக்கு வந்து அமாற்து கொண்டோம். அது தூங்குவதற்கோ, நல்ல விசாலமாக உட்காருவதற்கோ ஏற்ற பேருந்தில்லை. சரி என்று குளிர் காற்றை அடக்க ஒரு மேல் சட்டை மேல் ஒரு ஜேர்கின் அணிந்து கொண்டேன்.. ஒசூர் தாண்டிய உடன் தொடங்கிய மழை பேருந்திற்குள்ளும் பெய்தது, தமிழனுக்கே வாய்த்த பாக்கியம் என்று, அரை தூக்கத்தில் விழித்திருந்தே பயனமானென்..
அவ்வப்போது நாம் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் பற்றி பின் இருக்கை இன்று குடிக்ாத கடைசி குடிமகன்கள் கேட்கும் கேள்விகள் வேடிக்கை யாகவும் சிந்திக்கவும் வைத்தது.. அதில் இன்னோர் முக்கிய சொற்கள், நாம் என்றுமே அதிகமா கேட்டிருக்க வாய்ப்பில்லை, "ஆச்சா பாரு", இது நாளை அவர்கள் பேருந்து நிளயத்தில் இறங்கிய உடன் க்காா போக காத்திருக்கும் போது உபயோக படுத்த வேண்டிய வார்த்தை, இதுவும் தமிழனுக்கே வாய்த்த ஒன்று அது கொடலை விட்டு நகராமல் அந்த நாள் நகர வாய்ப்பில்லை பலருக்கு.. இப்படியா நகர்ந்தது மழையும் இவர்களின் நாளை பற்றிய கவலை ஏதுமில்லாத வெகுளி தனத்திற்க்கும் ஊடாக.. அதற்கு பின்பு ஒரு வழியாக நான் திருச்சியை அதயும் போது காலை 10 .. தூக்கம் கலைந்தாலும் அடி தத்து மக்களோடு பயணம் செய்த அனுபவம் மாறாக முடியாது..
பின் குறிப்பு : நிலயம் பல இடங்களில் பிழை, எனது அல்ல மன்னிக்கவும்
Labels: bangalore, bengaluru, makkal, mazhai, naam, pani, payanam, salem, tiruchi, trichy, vikruthi

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home