ஆப்பிள்
மேல கூகல் தளத்தில் சேற்ச்சியது, 20 ஆப்பிலில், 4 மட்டுமே உண்மையான ஆப்பிள், எங்கே செல்கிறது உலகம். :-)
ஆப்பிள் ...
இத கேட்ட ஒடனே மொதல்ல நம்ம நெநவுக்கு வர்றது என்னனு தெரியும், அப்டி என்னதான் யா இருக்குது அதுல, சும்மா வாச்சுக்கும், வெட்டி பீலா விடுவதற்கு வாங்கி வைத்திருக்கும் வஸ்துக்களே இது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. சரி இது பீலாஉக்கெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு சில பல கேள்விகள். நீங்க 3 வருடம் முன் என்ன செய்தீர்கள்? கடைசியாய் கண் மூடி காற்றின் சப்தம் கேட்டது எப்போது? அரிசி 1 கிலோ எவ்வளவு. கணினி சம்பந்தம் இல்லாத மனித சந்தித்தது கடைசியாக எப்போது? பால்ய நட்புக்களை கடைசியாய் சந்தித்தது எப்போது? இந்த பதில்களில் நீங்கள் எந்த பக்கம் என்று தெரிந்து விடும். அடுத்தது ஆப்பிள் பற்றி தெரியாமல் இருந்தாலோ, தெரிந்தும் பேசாமல் இருந்தாலோ, நாம் வெள்ளை கணினி போதை கூட்டத்தின் கண்களுக்கு படிக்காதவர்கள் போல் தோன்றும் போலும். கை பேசி பேசுவதற்கே, அதை 2000 ரூபாய் மதிப்புள்ள கை பேசியில் பேசலாம், எதற்கு 40000. இதே விடயம் எல்லா பொருளுக்கும் பொருந்தும்.
இதில் இன்னொரு பெருமை ஸ்டீவ் படங்களை முக பதிவில் திரிய விடுவதும், ஸ்டீவ் அர்.ஐ.பீ ரெஸ்ட் இன் பீஸ், என்று சொல்வதில் தான் எவ்வளவு பெருமை, அவர்களில் பாதி நபர்க்கும் தங்களின் பெரியப்பா , தாத்தா இருக்கிறார்களா என்று தெரியாது. மீதி பேருக்கு, அணு உளைச்சல் , லங்கை மக்கள் உளைச்சல் பற்றியோ, தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ இன்று இது பற்றி பதிவு செய்ய தோன்றியது செய்து விட்டேன். வெள்ளை பூதம் பிடித்த நண்பர்கள் மன்னிக்கவும். நியாய விலை அங்கடியில் பொருள் வேண்டாம், ஆனால் அமெரிக்காவில் வெளி வந்த அதே நாள் இங்கு வந்து விடவில்லையே, என்று கவலை கொள்ளும் மக்கள் மத்தியில் வாழ்வதில் ரொம்ப பெருமை :-) ஆப்பிள் கலக்காத வாழ்க்கையில் வாழ பழகி கொண்டிருக்கும் அப்பாவிகளாக பாவிக்கப்படும் மிஞ்சிய சிலரில் ஒருவன்.. ;-)
Labels: apple, computer, generation, rice


