புத்தக அலசல் - அன்னை வயல் - சிங்கிச் இய்த்மதவ்
கதை பின்னப்பட்ட பின்னணி ருஸ்ஸிய போர் எப்படி அங்குள்ள சாதாரண குடும்ப,கிராம சமூக மாற்றம் ஏற்படுத்தியது என்பதை மிக அழகாக கூறி இருந்தார் படைப்பாளி. இரண்டு சிறு குழந்தைகள் வயலில் தின கூலி வேலை ஆட்கள். வயல் இயற்கை உழைப்பு போலவே இவர்களுக்குள் காதலும் தன்னை அறியாமல் ஊடுருவி, வயலில் படுத்து நிலவை பார்த்து, இந்த வயலில் நாம் அடிமையாக வேலை பார்ப்பது போல் அல்லாமல், இங்கு பார்க்கும் வேலைக்கு கூலி என்றில்லாமல், வரும் அறுவடையில் இருந்து வரும் தானியத்தில் ஒரு பங்கு என்று இருந்தால் நாமும் இன்னும் எவ்வளவு அற்புதமான வாழ்க்கை வாழலாம் என்று கதைத்து, கொள்வான் அவ்வப்போது. இப்படியாக போய் கொண்டிருக்க இவர்களுக்கு திருமணம் 3 ஆண் குழந்தைகள் என்று ஆனந்த வாழ்க்கை, வாழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயம், ஜெர்மன் படைகள் ரஶிய படைகளை நெருங்க என்று இந்த வீட்டில் உள்ள அனைத்து ஆண் மகன்களும், போருக்கு செல்ல வேண்டிய கட்டாயம். இதில் முதல் மகன் காதலித்து ஓர் பெண்ணை மனம் முடித்து 2 மாதங்களே கடந்திருக்கிறார்கள். ஒரு வழியாக ரஶிய படைகள் வென்று விட்டன என்ற நற்செய்தியோடு 4 ஆண் மகன்களும் வீர மரணம் அடைகிறார்கள், என்ற செய்தி இவர்களை இடியாய் வந்து விழுகிறது. ஊர் தலைவியாகவும், கணவனை இழந்த மனைவியாகவும், 3 மகன் இழந்த துயர், விதவையான மருமகள், இப்படி பல துன்பங்கள் எப்படி அவள் வாழ்க்கை பாதையை, மாற்றி தன் வயலிடமும், நிலத்திடம் நியாயம் கேட்பதாக அமைகிறது இந்த கதை.. ரஶிய புரட்சியால் இழந்தவைகளும் ஏராளம் என்பதை சொல்கிறது கதை. படித்தது தமிழ் மொழி பெயர்ப்பில்.
Labels: சிங்கிச் இய்த்மதவ், புக்ஸ், ரஷ்ய புரட்சி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home