Tuesday, May 29, 2012

சினிமா : தேவர் மகன்



1992 - பெருசா ஒண்ணும் செய்திருக்க மாட்டோம், வெட்டி சாகும் அளவுக்கு நாம் மதம் பிடித்த மத பிடிப்புள்ளவர்கள் அல்ல. நம் மத நம்பிக்கைகள், அறுவடை முடித்து நன்றி படைக்கும், விதை விதைக்கும் முன் நல்ல மகசுலை தர வேணும் என்றெண்ணி, குடும்பமாகவும், ஊர்கள் ஒன்று கூடியும் ஆனந்தப்படும் சமூக காலத்தை சற்றே தொலைத்து, கொஞ்சம் சுயநலமாக சிந்திக்க சொல்லி கொடுத்த காலத்துக்கும், மத்தியில் கடந்து வந்தவர்கள். கதைக்கு வெளிய போய்ட்டோம், 1992 பாபர் மசூதி இடிப்பு சற்றே நம்மை பாதித்தாலும், பெரிதாக பதிக்காத காரணம், தமிழகத்தின் திராவிட கொள்கைகளை பின்பற்றியவர்கள் பலர், மற்றும் சிலர் மேல் சொன்ன விவசாயம் சான்ற சாமியாகவே மதங்களை பார்த்தனர். அதனால் நமக்கு ராமன் பற்றிய கவலை பெரிதாக தோன்றவில்லை, திராவிடம் செய்த நல்ல காரியம்.

1992 எனக்கு இப்போதும் மனதில் நிற்பது நல்ல திரைப்படம் ஒன்று, தேவர் மகன். அது போல் இனி ஓர் திரைப்படம் வர இயலாது, அது போன்று ஓர் புத்தகம் கூட எழுத முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. படத்தின் ஒவ்வரு அசைவுகளும், காவியம் ஒன்றை வாசித்த திருப்தியை தரும். என்னோட இத்தனை வருஷ படிப்ப இந்த பட்டிக்காட்டு ஊரில கழிப்பது சரி அல்ல என்று சொல்லும் மகனுக்கு, அய்யா இது காலகாலமாக செழிச்ச மண்ணு, விதை விதச்ச ஒடனே பழம் சாப்பிட முடியுமா , இன்னைக்கு நான் விதைக்கிறேன் நாளைக்கு நீ சாப்பிடுவாய், நாளைக்கு நீ விதைப்ப, அப்போறோம் உன் பையன், இப்படியே போய்ட்டிருக்ககணும். மண்ணொட மகத்துவம், மண்ணொட பிரச்சனைகள், இதுனால எப்படி இரண்டு குடும்ப பிரச்னை ஊர் பிரச்னை ஆகி, சக்திவேல் எப்படி அந்த ஊருக்கு வேண்டிய நல்லது செயுறார், வாய்க்கால் தகராறு, கிரயம் , சொத்து வழக்கு, இப்டி கிராமத்தின் மண் வாடை மாறாது சக்தி வேல் ஆகவே இந்த படத்தில் மாறிய கமல் ஹாசனின் நடிப்பு சிகரம். அதற்கு ஏற்ற இசையை கொடுத்த ராஜா பற்றி சொல்ல இந்த பத்தி போதாது. நாம் இந்த காலத்திலும் மண்ணிலும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கும் படம். இன்னும் தோணும் போதெல்லாம் இது பற்றி எழுதலாம், இப்போதைக்கு முடிக்கிறேன்.

Labels: , , , , , ,

Wednesday, May 23, 2012

டாலர் காசும் காந்தி நோட்டும்

                                                   டாலர்க்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது, இது ரொம்ப வருஷமாவே தலைப்பு செய்தி தான், மதிப்பு குறைந்தால் எனக்கு என்ன, இதுக்கு கடைசியில பதில் சொல்வோம், இப்போ அது எப்படி குறைந்தது னு பார்ப்போம், மதிப்பு குறைவதற்கு முக்கியமான சில காரணங்கள், ஒரு வரியில் சொன்னால் ஏற்றுமதியை விட இறக்குமதிகள் அதிகம்.
                                                ரொம்ப பெருசா சொன்னா, ஆப்பிள் திங்கிறத, வுட்டு வாழைப்பழம், பிட்ஸா இல்லாம லோக்கல் காரைகுடி சாப்பாடு, ஹெர்பாலைஃப் இல்லாம ஆர்ய வைத்திய பொடி, இது மாதிரி சின்ன சின்ன மாற்றம். விவசாயம் அத பத்தி பேச பெரிய பதியே எழுதணும், இந்த மோன்சாதோ, சய்ங்கெண்டா, விதை லாம் வாங்காம, உரம் இடாம, பண்ணுங்க. தாய்மார்கள் கொஞ்ச நாளைக்கு தங்கம் வாங்காம இருந்து தான் பாருங்களேன், அப்றோம் ஆப்பிள் ஐ போன், கார் வாங்க போகும் நண்பர்கள் வோக்ஸ் வாகன், போர்டு, இல்லாம மகேந்திரா, மாருதி கூட வாங்கலாம், அப்பறம் பண வீக்கம், எப்டி குறைப்பது இதெல்லாம் தான் வழி, கடைசியா இந்த ஊழல் பண்ணி காச பூராம், வெளிநாட்டு க்கு வங்கி கணக்குல வைக்கும் பழக்கம் உள்ளவர்கள், கொஞ்சம் லேசா போட்டு தள்ளிட்டா, எல்லாம் சுபமே, அப்பறம் பீடர், ஸ்டீவ், ஜான், மொலம் னு எல்லா நம்ம ஊருக்கு வந்து கீர விக்க வச்சுடலாம்.

சொல்ல மறந்த பதில்
-------------------------------
எனக்கு என்னனு கேட்டவங்களுக்கு பதில், 4 வருடம் முன்பு ஒரு முழு சாப்பாடு சராசரியாய் 20 இப்போது 60, 4 வருடம் முன்பு 42 இப்போ 73. அரிசி அப்போது 15 இப்போது 33. போதுமா னே,

Labels: , , ,

Tuesday, May 1, 2012

May Day - ஸார் நீங்களும் தான்

மே தினம் பலரால் கொண்டாட படுகிறது, இது இப்போது இதன் பொழிவை இழந்து விட்டது என்றே சொல்லலாம். சரி இதற்கு வருவதற்கு முன்பு மே தினம் முதலில் வந்தது எப்படி, சுமார்  100 வருடம் முன்பு சென்று பார்த்தால், இப்போது நாம் சக கூலி தொழிலாளி ஒருவன் பீடர்(தற்கால தமிழ்) விடும் அமெரிக்க வில் ஒரு தொழிலாளிகள் புரட்சி நடந்தது எதற்காக ௮ மணிநேர வாழ்க்கை சுழற்சி காக, சரி அவர்கள் அதில் வென்றார்களா என்றாள் ஆம், அதற்கான போராட்டங்கள் பல, இது அமெரிக்கா மட்டும் அல்லாமல் பல தேசங்களிலும் ஒரே குரலாக ஒலித்தது. முதலாளிகள் தொழில் புரட்சி என்ற பெயரில் தொழிலாளிகள் வாழ்க்கை நிலையை பற்றி இல்லாமல் வந்ததற்கு மொத்தமாக தொழில் முடக்க பட்டது. இறுதியில் அவர்கள் வென்றார்கள். 8 மணிநேர பணி என்ற் நிலைமைக்கு வந்தது உலகில் உள்ள பல நாடுகள். இதுவே வருட வருடம் தங்கள் வர்க பலத்தை எடுத்துரைக்கும் மே தினம் ஆனது.
         இன்று நாம் வாழ்வது அவர்கள் வழியிலா இல்லவே இல்லை. கையில் மாத சம்பளம், திக்கு தெரியாத வாழ்க்கை, சொகுசான கார், வங்கி கடன் வாங்கி ஒரு வீடு, இன்று வேலை போகுமோ நாளை வேலை இருக்குமோ என்று தெரியாத குழப்பம், நுனி நாக்கில் ஹிந்தி ஆங்கிலம், குடிப்பதற்கு பெப்ஸி கோலா, எல்லாம் ரைட், ரோட்ல ஒருத்தன் சிகப்பு கோடி புடிச்சு போராடின எவணுக்கோ வந்த எழவுனு இருக்குற நாம சமுதாயம். சில நேரங்களில், ஏதோ கணினி சம்பந்தம்  இருந்தா பில் கேட்ஸ், அம்பானி, மாதிரி ஒரு அப்படாகேர்னு நினைக்கிறது. உண்மை நிலை ஏஸீ அறையில் மற்ற தொழிலாளியை விட அதிகமாக(அதிகமான நேரம்) உழைத்து , வாழ்க்கையின் சுவை மறந்த நீ அவனை கண்டு ஒதுங்குவது, சிரிப்பான சிரிப்பு. வாழ்க்கையின் இன்பம் 8 மணி நேர பணிக்கு பின்பும், முன்பும், பணியிலும் இருக்க வேண்டும், பணியில் மட்டுமே அல்ல. அதை விட அதி முக்கிய விடயம், காதல் உணர்ச்சியை சொல்வதை விட, வர்க்க உணர்ச்சியை சொல்வதற்கும், செயல்படுத்துவதற்கும், நெஞ்சில் உரம் வேண்டும். என்னதான் பல உடை மாற்றினாலும் , பல தேசங்கள் போனாலும், டியொ அடித்தாலும், உள்ள நீங்க ஒரு தொழிலாளி, இது தான் உண்மை, சிலருக்கு கசப்பான உண்மை. இப்போ சொல்லுங்க நாம எல்லாம் ஒண்ணு தானா இல்ல இப்பவும் நான் பெரிய அப்படாகேர் சொனீங்காண ஓனும் பண்ண முடியாது. சரி முதலாளிகள் பற்றி அடுத்து வரும் அத்தியாயத்தில் பேசுவோம்.

Labels: , , ,