Tuesday, May 29, 2012

சினிமா : தேவர் மகன்



1992 - பெருசா ஒண்ணும் செய்திருக்க மாட்டோம், வெட்டி சாகும் அளவுக்கு நாம் மதம் பிடித்த மத பிடிப்புள்ளவர்கள் அல்ல. நம் மத நம்பிக்கைகள், அறுவடை முடித்து நன்றி படைக்கும், விதை விதைக்கும் முன் நல்ல மகசுலை தர வேணும் என்றெண்ணி, குடும்பமாகவும், ஊர்கள் ஒன்று கூடியும் ஆனந்தப்படும் சமூக காலத்தை சற்றே தொலைத்து, கொஞ்சம் சுயநலமாக சிந்திக்க சொல்லி கொடுத்த காலத்துக்கும், மத்தியில் கடந்து வந்தவர்கள். கதைக்கு வெளிய போய்ட்டோம், 1992 பாபர் மசூதி இடிப்பு சற்றே நம்மை பாதித்தாலும், பெரிதாக பதிக்காத காரணம், தமிழகத்தின் திராவிட கொள்கைகளை பின்பற்றியவர்கள் பலர், மற்றும் சிலர் மேல் சொன்ன விவசாயம் சான்ற சாமியாகவே மதங்களை பார்த்தனர். அதனால் நமக்கு ராமன் பற்றிய கவலை பெரிதாக தோன்றவில்லை, திராவிடம் செய்த நல்ல காரியம்.

1992 எனக்கு இப்போதும் மனதில் நிற்பது நல்ல திரைப்படம் ஒன்று, தேவர் மகன். அது போல் இனி ஓர் திரைப்படம் வர இயலாது, அது போன்று ஓர் புத்தகம் கூட எழுத முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. படத்தின் ஒவ்வரு அசைவுகளும், காவியம் ஒன்றை வாசித்த திருப்தியை தரும். என்னோட இத்தனை வருஷ படிப்ப இந்த பட்டிக்காட்டு ஊரில கழிப்பது சரி அல்ல என்று சொல்லும் மகனுக்கு, அய்யா இது காலகாலமாக செழிச்ச மண்ணு, விதை விதச்ச ஒடனே பழம் சாப்பிட முடியுமா , இன்னைக்கு நான் விதைக்கிறேன் நாளைக்கு நீ சாப்பிடுவாய், நாளைக்கு நீ விதைப்ப, அப்போறோம் உன் பையன், இப்படியே போய்ட்டிருக்ககணும். மண்ணொட மகத்துவம், மண்ணொட பிரச்சனைகள், இதுனால எப்படி இரண்டு குடும்ப பிரச்னை ஊர் பிரச்னை ஆகி, சக்திவேல் எப்படி அந்த ஊருக்கு வேண்டிய நல்லது செயுறார், வாய்க்கால் தகராறு, கிரயம் , சொத்து வழக்கு, இப்டி கிராமத்தின் மண் வாடை மாறாது சக்தி வேல் ஆகவே இந்த படத்தில் மாறிய கமல் ஹாசனின் நடிப்பு சிகரம். அதற்கு ஏற்ற இசையை கொடுத்த ராஜா பற்றி சொல்ல இந்த பத்தி போதாது. நாம் இந்த காலத்திலும் மண்ணிலும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கும் படம். இன்னும் தோணும் போதெல்லாம் இது பற்றி எழுதலாம், இப்போதைக்கு முடிக்கிறேன்.

Labels: , , , , , ,