வானம் தாங்கும் சிறு முட்கள்
சற்றே குழம்பி போனேன்..
மாதா மேரி கையில் அன்பின் பிறப்பிடாமாக கருதப்படும் குழந்தை ஏசு..
குழப்பம் எனக்கு மற்றவர்கள் போல் கன்னி எப்படி குழந்தையோடு என்றல்ல..
குழந்தை மேல் வானம் நோக்கி நீட்டும் சுட்டு விரலால் வானத்தை தாங்கி கொண்டிருக்கிறான் நான் காணும் கோணத்தில்..
ஆக இவனால் ஆக்கப்பட்ட இவள், இவனை தாங்கி கொண்டிருக்கிறாளா..
இல்லை அவளால் உருவாக்கப்பட்ட இவன் , இவளை தாங்கி கொண்டிருக்கிறானா..
சற்றே குழம்பி போனேன் ஒவ்வொரு முறை கன்னி(மாதா) மேரி தேவாலயத்தை கடக்கும் போதும்..
Labels: church

1 Comments:
அருமை
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home