முட்டைக்கு மயிர் எடுக்குற வேலை
முட்டைக்கு மயிர் வைக்கிற புடுங்குற வேலை என்றால் என்னனு முதலில் கதைக்க வேண்டுமல்லவா. இது எப்டி நான் முதலில் கேட்டேன்னு கேட்டிங்கன்னா என் நண்பருடைய நண்பர் சொல்லி கேட்டது நிகழ்வு துபாய் கிரீக் அருகில் இரவு சிற்றுண்டியை முடித்து கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவர் அலுவல் மற்றும் பணி பற்றி தற்செயலாக கதைக்கும் பொழுது வந்து விழுந்த முத்தான வார்த்தை இது .. அவர் ௪௫ வயது மதிக்கத்தக்க ஆரம்ப காலங்களில் துபையில் இருந்ததால் அங்கயிய குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் கட்டாயத்திற்கு ஆளானவர். மறக்க முடியாத ஓர் நண்பர். இப்போது நம் கதைக்கு வருவோம், அவ்வபோது தோன்றி மறையும், இன்று எனக்கு ஒரு ரிப்போர்ட் செய்து கொடுக்க வேண்டிய பணி வந்தது. இதில் வித்யாசம் என்ன என்றால் பக்கத்தின் இடது முனையில் இருந்து வலது முனை வரை நிரம்பி கிடக்கையில் இன்னும் ரெண்டு தகவல் மணிகளை (பீல்ட்ஸ்) சேர்க்க வேண்டும் என்பது இந்த முட்டாள் செய்ய வேண்டிய வேலை.. இதை கண்காணிக்கவும் என்னை சீர் திருத்தவும் என்று ௩ பேர் இப்படி செய்ய முடியாத பொறுமையை சொதிக்கவும் கொடுக்கப்படும் வேலையே முன்பு சொன்ன முட்டைக்கு மையறு ஓட்ற வேலை.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home